மாநில செய்திகள்

செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு + "||" + Holiday announced for Chengalpatu Kanchipuram Thiruvallur districts

செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. இதை தொடர்ந்து சென்னைக்கு விடுக்கப்பட்டு இருந்த அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை நேற்று மாலை விலக்கப்பட்டது.

இருப்பினும்  செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டக்களில்  பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில்   முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

 கனமழை தொடர்வதாலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும்  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

மேலும் திருவள்ளூர்  மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை விட்டப்பட்ட நிலையில் நாளையும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே ரூ.5 லட்சம் திருட்டு போனதாக பொய் புகார் அளித்தவரை எச்சரித்து அனுப்பிய போலீசார்
திருவள்ளூர் அருகே ரூ.5 லட்சம் திருட்டு போனதாக பொய் புகார் அளித்தவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
2. எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு உயிர் தப்பிய வாலிபர்
எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு வாலிபர் உயிர் தப்பினார். மோட்டார் சைக்கிள் 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு சுக்கு நூறானது.
3. திருவள்ளூர் அருகே ரூ.9½ லட்சம் மோசடி; வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே டெலிகிராம் மூலம் குறைந்த பணம் செலுத்தினால் அதிக பணம் தருவதாக ரூ.9½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. திருவள்ளூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
திருவள்ளூர் அருகே தூங்கி கொண்டிருந்த தொழிலாளியின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
5. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் ; வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.மின்சார ரெயில்கள் ஊர்ந்து சென்றன.