மழைநீர் சூழ்ந்து இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு சிறிய அளவிலான தானியங்கி படகுகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு


மழைநீர் சூழ்ந்து இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு சிறிய அளவிலான தானியங்கி படகுகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 12 Nov 2021 7:06 PM GMT (Updated: 12 Nov 2021 7:06 PM GMT)

மழைநீர் சூழ்ந்து இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு சிறிய அளவிலான தானியங்கி படகுகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு சென்னையில் 6 இடங்களில் சோதனை முறையில் இயக்கம்.

சென்னை,

சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தண்ணீர் சூழ்ந்து இருக்கும் குடியிருப்புகளில் வசிப்பவர்களை தொடர்பு கொள்ளும் விதமாக தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு கண்டுபிடிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் “டிரோன்” உதவியுடன் சில தீர்வுகள் காணப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது மழைநீர் சூழ்ந்து இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஏதுவாக சிறிய அளவிலான தானியங்கி படகுகளை காவல் துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

இந்த தானியங்கி படகில் உணவு பொருட்கள், வாட்டர் பாட்டில்கள், மருந்து பொருட்கள் என 15 கிலோ எடை வரையில் அனுப்பி வைக்கமுடியும்.

மேலும் அதில் பொருத்தப்பட்டு இருக்கும் ஒலிப்பெருக்கி மூலம் பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வையும் அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் 6 இடங்களில் சோதனை முறையில் இந்த படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.


Next Story