மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் + "||" + Consultative meeting with all party representatives on local elections

உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்தது.
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரைவு வாக்காளர் பட்டியல், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் உள்ளிட்ட வகைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அனைத்துக்கட்சி பிரதிநிதியினர் முன்னிலையில் வெளியிட்டார். இந்த இரு பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் விஷூ மஹாகன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எம்.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் சிட்டி பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகளை, மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நகர்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் எ வ வேலு ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் எ வ வேலு ஆலோசனை நடத்தினார்
2. பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்
பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
நாளை முதல் 5 நாட்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
4. கொரோனா சூழல்; மாநில சுகாதார மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
கொரோனா சூழல் பற்றி மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
5. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை என்றும், நீட் தேர்வு தேவையற்றது என்றும் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.