இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சையில் ரூ.1.10 கோடியில் உணவு அருங்காட்சியகம்


இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சையில் ரூ.1.10 கோடியில் உணவு அருங்காட்சியகம்
x
தினத்தந்தி 15 Nov 2021 8:11 PM GMT (Updated: 15 Nov 2021 8:11 PM GMT)

இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சையில் ரூ.1 கோடியே 10 லட்சம செலவில் உணவு அருங்காட்சியகத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் குழந்தை ஏசு கோவில் அருகே இந்திய உணவு கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இந்தியாவிலேயே முதல் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழகமும், பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து 1,890 சதுர அடி பரப்பளவில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் இந்த உணவு அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளன.

பியூஷ் கோயல் திறந்து வைத்தார்

இந்த அருங்காட்சியகத்தை மும்பையில் இருந்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்த ஏர்கலப்பையின் மாதிரி வடிவங்கள் இடம் பெற்று இருந்தன. மேலும் அந்த காலத்தில் ஒரு கிராமம் எப்படி இருந்து இருக்கும். மக்களின் பழக்க, வழக்கங்கள், தொழில், நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் மனிதர்கள் வேட்டைக்காக ஆயுதங்களாக பயன்படுத்திய கற்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Next Story