கோவையில் 2 பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Nov 2021 4:53 AM GMT (Updated: 16 Nov 2021 4:53 AM GMT)

கோவையில் 2 பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவை, 

கோவையில் இரண்டு பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை 13 பேரையும் வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியில் வரும் போது முககவசம் அணிய வேண்டும் என்றும் வீட்டினை சுத்தமாக வைக்க வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுமாறும் கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இரண்டு பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story