மாநில செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா + "||" + Chennai Super Kings Commendation ceremony led by Stalin

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

2021- ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  4-வது முறையாக சாம்பியன் பட்டம்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருப்பதாக தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். 

இதனிடையே, சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின அலங்கார ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும்: மு.க ஸ்டாலின் அறிவிப்பு
டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. 'கிறிஸ்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க. என்றைக்கும் துணை நிற்கும்'-மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம்: முதல் அமைச்சர் அறிவிப்பு
நெல்லையில் பள்ளிக்கூடத்தின் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
4. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்
சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
5. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.