மாநில செய்திகள்

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தவர்: போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Poonamallee police station employee: Suicide by hanging police record

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தவர்: போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தவர்: போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
மாங்காட்டில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,

மாங்காடு வசந்தபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 41). பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி (35), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்த ராஜசேகர் நேற்று காலை வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.


தனது மகனின் அறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

தூக்கில் தொங்கிய நிலையில்...

அவரது மனைவி கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சால்வையில் ராஜசேகர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மகள் காதலனுடன் ஓடிச்சென்று திருமணம் செய்ததால் அவமானம் தாங்காமல் கொத்தனார் தற்கொலை
காதலனுடன் மகள் ஓடிச்சென்று திருமணம் செய்ததால் அவமானத்தில் மனமுடைந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம் தீர்ப்புக்காக வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது
பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம் நடந்தது. பின்னர் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
3. 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூரில் 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
4. 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூரில் 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
5. செல்போனில் படம் பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் படம் பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.