பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் பரிசு


பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 16 Nov 2021 11:02 PM GMT (Updated: 16 Nov 2021 11:02 PM GMT)

பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும், என்று என்.ஐ.ஏ. போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு திருவிடைமருதூர் போலீசாரால் முதலில் விசாரிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இந்த கொலை வழக்கில் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக உள்ள முகமது ஜின்னா, அப்துல்மஜித், புர்ஹானுதீன், ஷாஹூல் ஹமீது, நபீல்ஹாசன் ஆகிய 5 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு அறிவித்துள்ளது.

துப்பு கொடுத்தால்

ரூ.5 லட்சம் பரிசு

இவர்கள் 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 5 பேரின் புகைப்படங்களுடன் ஏராளமான துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ஒட்டி உள்ளனர். அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த 5 பேர் பற்றி தகவல் தெரிந்தவர்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் செயல்படும் என்.ஐ.ஏ. போலீசாருக்கு 99623 61122 என்ற செல்போன் எண்ணுக்கும், 044-26615100 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story