மாநில செய்திகள்

நிலச்சரிவு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Change in Express Rail Services Due to Landslide - Southern Railway Announcement

நிலச்சரிவு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நிலச்சரிவு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நிலச்சரிவு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நிலச்சரிவு காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் இன்று (17-ந்தேதி) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* நாகர்கோவில்-திருவனந்தபுரம் (வண்டி எண்: 06426), திருவனந்தபுரம் -நாகர்கோவில் (06427), கொல்லம்-திருவனந்தபுரம் (06425), திருவனந்தபுரம்-கொல்லம் (06435) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் (12634) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-குருவாயூர் (16127) இடையே இயக்கப்படும் ரெயில் நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு (16525) ரெயில் கன்னியாகுமரி-கொல்லம் இடையிலும், நாகர்கோவில்-கோட்டயம் (06366) ரெயில் நாகர்கோவில்-கொல்லம் இடையிலும், கொல்லம்-எழும்பூர் (16724) ரெயில் கொல்லம்-நாகர்கோவில் இடையிலும், நாகர்கோவில்-மங்களூரு (06650), நாகர்கோவில்-மங்களூரு (06606) ரெயில்கள் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* மங்களூரு-நாகர்கோவில் (06649), மங்களூரு-நாகர்கோவில் (06605) ரெயில்கள் திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையிலும், திருச்சி-திருவனந்தபுரம் (02627) ரெயில் நெல்லை-திருவனந்தபுரம் இடையிலும், திருவனந்தபுரம்-திருச்சி (02628) ரெயில் திருவனந்தபுரம்-நெல்லை இடையிலும், கன்னியாகுமரி-ஹசரத் நிசாமுதீன் (06011) ரெயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
2. வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு; 18 பேர் மாயம்
வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளனர் என கூறப்படுகிறது.
3. இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. நிலச்சரிவு: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நிலச்சரிவு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
5. தீபாவளி பண்டிகை: எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது.