மாநில செய்திகள்

“சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு” - பாமக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு..! + "||" + "Rs 1 lakh reward for kicking Actor Suriya" - case filed against PMK administrator

“சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு” - பாமக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு..!

“சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு” - பாமக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு..!
நடிகர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, 

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இருந்தபோது ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பாமக மாவட்ட செயலாளர், “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு  லட்சம் ரூபாய் பரிசு  அளிக்கப்படும். சூர்யாவின் எந்த படத்தையும் இந்த மாவட்டத்தில் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது” என்று அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 5 பிரிவுகள் கொண்ட பிரிவுகளில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..!
நடிகர் சூர்யா மீண்டும் கேங்ஸ்டர் கதபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
2. உள்ளம் உருகுதய்யா... சூர்யா படத்தின் அடுத்த பாடல்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
3. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது....!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்
4. தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
5. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.