மாநில செய்திகள்

பெண்ணின் ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலன் + "||" + Ex-boyfriend who sent pornographic video of girl to husband

பெண்ணின் ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலன்

பெண்ணின் ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலன்
பெண்ணின் ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பெஞ்சமின் பால் (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது கோவை-மேட்டுப்பாளையம் ரெயிலில் பயணித்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த ரெயில் பயணத்தின் போது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த இளம்பெண்ணும் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்து உள்ளார்.

இவர்கள் இருவரும் ரெயிலில் பயணிக்கும் போது அடிக்கடி சந்தித்து உள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. கல்லூரி படிப்பு முடிந்ததும் பெஞ்சமின் பால் துடியலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் பிரிந்தனர்.

இதனிடையே அந்த பெண்ணிற்கு கடந்த மாதம் வேறு நபருடன் திருமணம் ஆனது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு வீடியோ லிங்க் வந்து உள்ளது. அதனை அவர் திறந்து பார்த்து உள்ளார். அதில் அந்த பெண்ணின் ஆபாச வீடியோ இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் பெஞ்சமின் பால், மார்பிங் மூலம் அந்த பெண்ணின் ஆபாச வீடியோவை தயார் செய்து அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
2. நடத்தையில் சந்தேகம்: நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவர்
பரமக்குடி அருகே நடுரோட்டில் பெண்ணை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.