மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்- கன மழை எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் + "||" + Instruction to prepare drinking water, milk and food items for the people of Chennai for 2 days

அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்- கன மழை எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்-  கன மழை எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதில், அடுத்த 2 நாட்களுக்கு பொதுமக்கள் குடிநீர், உணவு, பால் மற்றும் காய்கறிகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 

044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 கனமழை எச்சரிக்கை - தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன .


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாநகராட்சி:மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பாணை ரத்து
சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
2. ஜம்மு- காஷ்மீரில் மிக கனமழை, பனிப்பொழிவிற்கான ‘ரெட் அலர்ட்’
ஜம்மு-காஷ்மீரில் மிக கனமழை மற்றும் பனிப்பொழிவிற்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வாளர் இன்று அறிவித்தார்.
3. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, பாதுகாப்பு மைய விவரங்களுக்கு இணையதளம் அறிமுகம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு மையங்களின் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
4. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் திங்கள் முதல் ஆய்வு செய்ய திட்டம்
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
5. 12 கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்'
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.