மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை..! + "||" + Red Alert for 7 districts including Tamil Nadu and Pondicherry

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை..!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை..!
தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,

வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் தற்போது காலையில் இருந்து கனமழை பெய்து வந்தாலும், பிற்பகலில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று “ரெட் அலர்ட்”  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) வானிலை மையம்  விடுத்துள்ளது. 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இந்நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி
தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
3. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா: 23 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 18ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
கொரோனா காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.