மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு + "||" + 11 districts in Tamil Nadu are likely to receive heavy to very heavy rains today

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

அந்தமானில் உருவான அந்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, வட மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் கனமழை கொட்டியது.

இன்று காலை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலைக் கொண்டு இருந்தது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும்-சென்னைக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரையை கடக்கும் என்று வானிலைமையம் தெரிவித்தது.. அவ்வாறு கரையை கடக்கும் நேரத்தில் வட தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்தது.

மிக கனமழை

இதன் காரணமாக, இன்று(வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

நாளை (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

காற்று வீசும்

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 22-ந்தேதி (திங்கட்கிழமை) வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

பள்ளிகளுக்கு விடுமுறை

மழை தொடருவதால் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை, காஞ்சீபுரம், திருவள் ளூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

கனமழையை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழைக்காலத்தில், 1-10-2021 முதல் 18-11-2021 வரை தமிழ்நாட்டில் 480.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 61 சதவீதம் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில சராசரி 28.9 மில்லி மீட்டர். திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.71 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

முக்கிய நீர்த்தேக்கங்களான, புழல் ஏரியில் இருந்து 2,500 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 700 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 3 ஆயிரம் கன அடியும், பூண்டி ஏரியில் இருந்து 12 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தயார் நிலை

தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தலா 2 குழுக்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 குழுவும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 54 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 ஜே.சி.பி. எந்திரங்களும், 793 ராட்சத பம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

அவசர கட்டுப்பாட்டு மையங்கள்

சென்னையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ்-அப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. இந்தியாவில் தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு - இன்று 2.71 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
3. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி
தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
4. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா: 23 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.