முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி.க்கு ஜாமீன்


முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி.க்கு ஜாமீன்
x
தினத்தந்தி 19 Nov 2021 11:35 AM GMT (Updated: 19 Nov 2021 11:35 AM GMT)

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷூக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை, 

கடலூர் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை செய்த கோவிந்தராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க., எம்.பி., ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவரது ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்,  கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கோந்தராஜ் மகன் தொடுத்த  வழக்கில் வரும் 23 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 


Next Story