பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடிவீடு


பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடிவீடு
x
தினத்தந்தி 19 Nov 2021 12:27 PM GMT (Updated: 19 Nov 2021 12:27 PM GMT)

அண்மைக் காலமாகப் பெய்துவரும் தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கே.வி.குப்பம்,

கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஐதர்புரத்தில், கிருஷ்ணசாமியின் மகன் வக்கீல் இளங்கோ (வயது 72). இவர் பாலாற்றின் ஓரமாக இருக்கும் இவருடைய பட்டா நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாடி வீடு கட்டினார். இந்த வீட்டில் 6 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்தது. இந்த மாடி வீடு கம்பீரமாகக் காட்சியளித்து வந்தது. அண்மைக் காலமாகப் பெய்துவரும் தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளம் இந்த மாடிவீட்டைச் சூழ்ந்துகொண்டது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த அழகிய மாடி வீடு மிகமெதுவாகச் சரிந்து, நொறுங்கி உருக்குலைந்தது. இதில் இருந்தவர்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக வருவாய்த் துறையினரால் வெளியேற்றப்பட்டு விட்டதால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story