“பிற மொழிகளை கற்பது பல வகையில் பயன் அளிக்கும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


“பிற மொழிகளை கற்பது பல வகையில் பயன் அளிக்கும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 19 Nov 2021 7:51 PM GMT (Updated: 19 Nov 2021 7:51 PM GMT)

“பிற மொழிகளை கற்பது பல வகையில் பயன் அளிக்கும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து.

மதுரை,

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு திட்டங்களுக்கு இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும்போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி இந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். அதனால் தமிழக மக்களுக்கு அந்த திட்டங்களின் முழுமையான பயன்கள் குறித்து தெரிவதில்லை.எனவே தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்களின் பெயர்களையும், எதிர்வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை மொழியாக கையாள வேண்டும். பிற மொழிகளை கற்றுக்கொள்வது நமக்கு பல வகையில் பயன் அளிக்கும். அந்த வகையில் இந்தியை ஏன் கற்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினர். பின்னர் மனுதாரர் தனது கோரிக்கை குறித்து தமிழ் வளர்ச்சித்துறையிடம் முறையிடலாம். தற்போது இந்த மனுவை வாபஸ் பெறலாமே? என மனுதாரர் வக்கீலிடம் கேட்டனர். அதற்கு மனுதாரரிடம் கேட்டு தெரிவிக்கிறோம் என்றதையடுத்து, இந்த மனுவை வருகிற 22-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story