மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பகுதிகளை மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்! + "||" + MK Stalin walked through the rainwater and visited the affected areas

பாதிக்கப்பட்ட பகுதிகளை மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்!

பாதிக்கப்பட்ட பகுதிகளை மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்!
மணலி புதுநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

சென்னை,

கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

மேலும் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி, அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை 30 ஆயிரம் கன அடி நீர் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆறு வழியாக வரக்கூடிய உபரிநீர் மணலி புதுநகரில் உள்ள மணலி சடயங்குப்பம் பகுதிக்குட்பட்ட வடிவுடை அம்மன் நகர், ஜெனிபர் நகர், மகாலட்சுமி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூழ்ந்தது.

இதனால் ஏராளமான குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களை மாநகராட்சி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அங்கிருந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதியில் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

தெருவில் சூழ்ந்துள்ள மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட அவர் மக்களிடம் குறைகளை கேட்டார். அதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் தங்கி உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

கனமழையால் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மணலி புதுநகர் பகுதி மக்களுக்காக, விவேகானந்தர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு  முதல்-அமைச்சர்  நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிவாரண முகாமில் சிறப்பு மருத்துவ முகாமை  முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது சென்னை மாநகர ஆணையர் சந்தீப் பேடி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் உள்பட பலர் உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
கடலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது
2. திடீர் மழை
சிங்கம்புணரி பகுதியில் திடீரென மழை பெய்தது.
3. தா.பழூரில் திடீர் மழை
தா.பழூரில் திடீரென மழை பெய்தது.
4. மழை வெள்ளத்தில் தத்தளித்த மணப்பாறை
மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 27.46 சென்டி மீட்டர் மழை பெய்ததால் குளம் உடைந்தது. தரைப்பாலங்களும் மூழ்கின. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
5. ஈரோடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை; குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. 2 வீடுகள் இடிந்து விழுந்தன.