மாநில செய்திகள்

குருவின் முன்னிலையில் பெண்ணை திருமணம் செய்து கொண்ட அகோரி மணிகண்டன்...! + "||" + Agori Manikandan married the girl

குருவின் முன்னிலையில் பெண்ணை திருமணம் செய்து கொண்ட அகோரி மணிகண்டன்...!

குருவின் முன்னிலையில் பெண்ணை திருமணம் செய்து கொண்ட அகோரி மணிகண்டன்...!
திருச்சியில் தன் குருவின் முன்னிலையில் பிரியங்கா என்ற பெண் அகோரியை அகோரி மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார்.
திருச்சி,

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் காசியில் பயிற்சி பெற்று அப்பகுதியில், ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் அகோரி பயிற்சி பெற்று வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் அகோரியை, தன் குருவான மதுரை பால்சாமி முன்னிலையில் தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, அகோரி கோலத்தில் இன்று அதிகாலையில் திருமணம் செய்தார்.

திருமணத்தின் போது சக அகோரிகள் தமரா மேளம் அடித்து, சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என்று முழங்கினார்கள்.

திருச்சியில் கடந்த 2018-ம் ஆண்டு  தாயின் சடலம் மீது அமர்ந்து  பூஜை செய்தது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.