ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து


ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 21 Nov 2021 10:10 PM GMT (Updated: 21 Nov 2021 10:10 PM GMT)

ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் சென்னை-நிசாமுதின் (12269) டுரண்டோ எக்ஸ்பிரஸ், சென்னை-அவுரா (12842) கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சென்னை-விஜயவாடா (12077) சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை-ஆமதாபாத் (12656) நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (22-ந்தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், ஜோத்பூர்-சென்னை (22664) இடையே இயக்கப்படும் ரெயில் உள்பட, வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Next Story