மாநில செய்திகள்

10-வது மெகா முகாம்: தமிழகத்தில் ஒரே நாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி + "||" + 10th Mega Camp: Vaccination of 18 lakh people in a single day in Tamil Nadu

10-வது மெகா முகாம்: தமிழகத்தில் ஒரே நாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி

10-வது மெகா முகாம்: தமிழகத்தில் ஒரே நாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 10-வது மெகா தடுப்பூசி முகாமில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1¼ லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.
சென்னை,

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26-ந்தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் மாதம் 3-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.04 லட்சம் பேருக்கும், 10-ந்தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.85 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


மேலும், அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற 6-வது மெகா தடுப்பூசி முகாமில் 22.27 லட்சம் பேருக்கும், 30-ந் தேதி 7-வது கட்டமாக 32 ஆயிரம் இடங்களில் 17.14 லட்சம் பேருக்கும், 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16.40 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

10-வது கட்டம்

மெகா தடுப்பூசி முகாமில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 9-வது கட்டமாக நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 50 ஆயிரம் இடங்களில் 10-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்தவகையில் தமிழக அரசிடம் கையிருப்பில் இருந்த 1 கோடி தடுப்பூசிகளுடன் காலை 7 மணி முதல் தொடங்கிய மெகா தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

18.21 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இரவு 7 மணி வரை நடைபெற்ற 10-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 18 லட்சத்து 21 ஆயிரத்து 5 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 580 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 48 ஆயிரத்து 425 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.

இதில் சென்னையில் 1,600 முகாம்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 596 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று(திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிக்கூட மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
பள்ளிக்கூட மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
2. தமிழகம் முழுவதும் ஜனவரி 22-ல் மெகா தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
3. முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முதல் ஊசியை அரசு ஆஸ்பத்திரி டீன் போட்டுக்கொண்டார்.
4. தமிழகத்தில் இன்று 16.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன
5. 36 ஆயிரத்து 516 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
மதுரை மாநகரில் 36 ஆயிரத்து 516 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன என்று மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.