சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவி ஏற்றார்


சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 22 Nov 2021 4:21 AM GMT (Updated: 22 Nov 2021 4:21 AM GMT)

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்று கொண்டார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். 

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை ஐகோர்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் இறையண்பு, சபாநாயகர் அப்பாவு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story