மாநில செய்திகள்

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம் + "||" + low pressure in bay of bengal

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம்

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும், குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.