மாநில செய்திகள்

உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்கு + "||" + Police prosecute 63 massage clubs for operating without following proper rules

உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்கு

உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்கு
சென்னையில் உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 55 கிளப்புகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
சென்னை,

சென்னையில் செயல்படும் சில மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. அதன்பேரில் சென்னையில் செயல்படும் மசாஜ் கிளப்புகளில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் செயல்பட்ட 151 மசாஜ் கிளப்புகளில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.


சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை நீடித்தது. உரிய அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு மசாஜ் கிளப்புகள் செயல்படுகிறதா?, என்று போலீசார் நடத்திய சோதனையில் ஆய்வு செய்யப்பட்டது.

63 கிளப்புகள் மீது வழக்கு

இந்த சோதனையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சோதனை நடத்தப்பட்ட மையங்களில் 23 மையங்கள் உரிய அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவது கண்டறியப்பட்டது.

போலீஸ் சோதனை நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, 55 மசாஜ் கிளப்புகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். 10 கிளப்புகள் உரிய உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இது போல் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் - சுந்தர் பிச்சை மீது வழக்கு
தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
2. தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 அசாம் வாலிபர்கள் கைது
பெரும்பாக்கத்தில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 4 அசாம் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
3. தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 அசாம் வாலிபர்கள் கைது
பெரும்பாக்கத்தில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 4 அசாம் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. பொது இடத்தில் முத்தம் கொடுத்த வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி விடுவிப்பு
பொது இடத்தில் முத்தம் கொடுத்த வழக்கில் இருந்து நடிகை ஷில்பா ஷெட்டியை மும்பை கோர்ட்டு விடுவித்து உள்ளது.
5. பொங்கல் பரிசு வினியோகத்தில் ரூ.500 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் சுமார் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.