சிறுவர்களின் குற்றச்செயல் அதிர்ச்சியளிக்கிறது: மாணவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை சரத்குமார் வேண்டுகோள்


சிறுவர்களின் குற்றச்செயல் அதிர்ச்சியளிக்கிறது: மாணவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை சரத்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Nov 2021 7:10 PM GMT (Updated: 23 Nov 2021 7:10 PM GMT)

சிறுவர்களின் குற்றச்செயல் அதிர்ச்சியளிக்கிறது: மாணவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை சரத்குமார் வேண்டுகோள்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பூமிநாதன், ஆடு திருடிய கும்பலை விரட்டி பிடிக்கச் சென்றபோது, ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைவாக கண்டறிந்து சட்டத்தின் பிடியில் நிறுத்தியிருக்கும் காவல்துறையினரை பாராட்டும் அதேவேளையில், சமூக குற்றச்செயல்களில், சிறுவர்கள் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருப்பது போல், மனோதத்துவ ஆசிரியர்களை நியமித்து அவர்கள் அன்றாடம் மாணவ, மாணவிகளை கண்காணித்து ஏதேனும் மாற்றம் தெரிந்தால் அதனை ஆராய்ந்து சிறந்த ஆலோசனையும், மனநிறைவான தீர்வும் வழங்கினால், சமூக சீர்கேடுகள், குற்றங்கள் தவிர்க்கப்பட்டு, சிறுவர்களின் எண்ணங்கள் சீர்பட உதவும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story