மாநில செய்திகள்

லாரி மீது கார் மோதி விபத்து: திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை பலி + "||" + Car crash on truck: Newlyweds killed the day after the wedding

லாரி மீது கார் மோதி விபத்து: திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை பலி

லாரி மீது கார் மோதி விபத்து: திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை பலி
லாரி மீது கார் மோதிய விபத்தில் திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை பலியானார். மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 38). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், சென்னையை சேர்ந்த கனிமொழி (32) என்பவருக்கும் கடந்த 21-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் தனது மனைவி கனிமொழி மற்றும் உறவினர்களுடன் சீனிவாசலு நேற்று முன்தினம் காரில் பெங்களூருவில் இருந்து சென்னையில் உள்ள மாமனார் வீட்டுக்கு புறப்பட்டார். காரை சீனிவாசலு ஓட்டினார்.


விபத்தில் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நள்ளிரவு 12.10 மணிக்கு கார் சென்றது. அப்போது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீனிவாசலு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி கனிமொழி படுகாயம் அடைந்தார். இவரது உறவினர்கள் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த சுமலதா (30), தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ரிஷிகா (21) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மைல்கல் மீது கார் மோதி 2 அய்யப்ப பக்தர்கள் பலி 4 பேர் படுகாயம்
மைல்கல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் 2 அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
2. குஜராத்: வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
3. ஈரோடு அருகே சாலை விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி
சிவகிரி அருகே லாரியும் மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
4. மலேசிய ராணுவ விமானம் பயிற்சியின்போது விபத்து - விமானப்படை அதிகாரி உயிரிழப்பு
மலேசியாவில் பயிற்சியின்போது ராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்தார்.
5. கார் மீது வேன் மோதி தாத்தா - பேரன் பலி உறவினர் திருமணத்திற்கு சென்றபோது பரிதாபம்
உறவினர் திருமணத்திற்கு சென்றபோது கார் மீது வேன் மோதியதில் தாத்தா - பேரன் பலியானார்கள்.