மாநில செய்திகள்

ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கரடி: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் + "||" + Bear enters hospital: Patients scream and run

ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கரடி: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கரடி: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கரடி: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்.
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கரடிக்கு அடிபணிந்த புலி
பந்திப்பூர் வனப்பகுதியில் கரடியை பார்த்ததும் புலி அடிபணிந்த சம்பவம் நடந்துள்ளது.
2. அமெரிக்கா: பெண்ணை கடித்து கொன்ற கரடியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்
அமெரிக்காவில் குடிலில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கரடி ஒன்று கடித்து கொன்ற துயர சம்பவம் நிகழ்ந்தது.