மாநில செய்திகள்

10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் + "||" + We, the Tamil Party, are protesting to demand the release of Muslims who have been imprisoned for more than 10 years

10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்.
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதனாலேயே அவர்களுக்கான ஜனநாயக உரிமையான விடுதலையை மறுத்துவரும் தி.மு.க.வின் மதவாதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.


மதத்தினை அளவுகோலாக கொண்டு மானுட உரிமையான விடுதலையை மறுக்கும் போக்கை கைவிட்டு, 10 ஆண்டுகளை கடந்த இஸ்லாமிய சிறைவாசிகள் அனைவருக்கும் தண்டனைக்குறைப்பு செய்து, அவர்களை உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாக வரும் டிசம்பர் 12-ந்தேதி சென்னையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். விடுதலையை தாமதப்படுத்தும் பட்சத்தில், தமிழகம் முழுக்க மக்களை திரட்டி தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.
2. வெள்ள நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: சென்னையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கக்கோரி சென்னையில், பா.ஜ.க. சார்பில் 7 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்காமல் கேரளத்தின் நிர்ப்பந்தம் காரணமாக நீர் இருப்பை தி.மு.க. அரசு குறைத்திருப்பதாக கூறி தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்க கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி நேற்று மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி 58 கிராமங்களில் கடைகளும் அடைக்கப்பட்டன.