மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு: 2.15 கோடி நெய் பாட்டில்கள் தயாரிப்பு - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு + "||" + Pongal Gift Package 2.15 crore Ghee Bottles Production Aavin Management

பொங்கல் பரிசு தொகுப்பு: 2.15 கோடி நெய் பாட்டில்கள் தயாரிப்பு - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு: 2.15 கோடி நெய் பாட்டில்கள் தயாரிப்பு - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

பொங்கல் பண்டிகைக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆவின் நிறுவனம் வழங்கும் 100 மில்லி லிட்டர் நெய்யும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு 135 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும், இதனால் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.