மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி + "||" + Water inflow in Mettur Dam is 30 thousand cubic feet

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 30 ஆயிரம் கன அடி மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி என அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. 

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் தற்போது நீர் இருப்பு 93.63 டி.எம்.சி.யாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறையத் தொடங்கியது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்; அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
3. மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார்.
4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5. மேட்டூர் அணையில் நீர்திறப்பு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 28 ஆயிரம் கன அடியில் இருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.