மாநில செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் + "||" + 317 crore Allocation for rehabilitation of Sri Lankan Tamils Minister Gingee Masthan

இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக தமிழக அரசு 317 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையை அடுத்த புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக தமிழக அரசு 317 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.