மாநில செய்திகள்

நடமாடும் மலிவு விலை காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Selling Tomatoes Through Mobile Vegetable Shops - Dr. Ramadoss Emphasis

நடமாடும் மலிவு விலை காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

நடமாடும் மலிவு விலை காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நடமாடும் காய்கறி கடைகளை உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் ஒரு நாள் தக்காளித் தேவை 5 ஆயிரம் டன் ஆகும். சென்னையின் ஒரு நாள் தக்காளித் தேவை மட்டும் சுமார் 1000 டன் ஆகும். ஆனால், தமிழகத்தின் மொத்த தேவையில் ஐநூற்றில் ஒரு பங்கை மட்டும் தான் கூட்டுறவு கடைகள் மூலம் அரசு விற்கவுள்ளது. அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

நியாயவிலைக் கடைகளைப் போலவே பண்ணை பசுமை கடைகளும் விலைக்கட்டுப்பாட்டுக்கான அற்புதமான தத்துவம் ஆகும். வெளிச்சந்தையில் பதுக்கல் காரணமாக விலைகள் உயரும்போது, பண்ணை பசுமைக் கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்கப்பட்டால், அதனால் வெளிச் சந்தையில் ஏற்படும் தாக்கத்தால், பதுக்கப்பட்ட பொருட்கள் வெளியில் கொண்டுவரப்படும். அதனால் விலைகள் குறையும் என்பது தான் அரசு நிறுவனங்கள் மலிவு விலையில் பொருட்களை விற்பதற்கான காரணம். சந்தையில் சமநிலையை ஏற்படுத்துவது தான் இந்தத் தத்துவத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

ஆனால், இப்போது பதுக்கல் காரணமாக விலை அதிகரிக்கவில்லை. மாறாக, பெருமழையால் தக்காளி மற்றும் காய்கறிச் செடிகள் அழிந்ததால், தேவைக்கும் வரத்துக்கும் இடைவெளி அதிகரித்தது தான் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இத்தகைய சூழலில் மிகக்குறைந்த அளவில் காய்கறிகளையும், தக்காளியையும் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா வரை இதே நிலை தான் என்பதால் சந்தைச் சமநிலை மூலம் காய்கறிகள் - தக்காளியின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பது தான் இன்றைய தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப் போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம். இவற்றை அரசு நேரடியாக உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதற்காக விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை தமிழக அரசு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ள பாதிப்பு நிவாரண பணிக்கு தமிழகத்துக்கு ரூ.1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக வெள்ள நிவாரண பணிக்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. இடஒதுக்கீடு சமூகநீதியை பாதுகாக்க - அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது
இடஒதுக்கீடு சமூகநீதியை பாதுகாக்க - அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்.
3. எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4. ‘‘பா.ம.க. தலைமையில்தான் இனிமேல் கூட்டணி’’ - சிறப்பு செயற்குழுவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
‘‘இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது’’ என்று டாக்டர் ராமதாஸ் உருக்கமாக பேசினார்.
5. புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ்
புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.