மாநில செய்திகள்

“மறைமுக தேர்தல் மூலமே சென்னை மேயர் தேர்வு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி + "||" + Chennai mayor will be elected through indirect election Minister Ma Subramanian

“மறைமுக தேர்தல் மூலமே சென்னை மேயர் தேர்வு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

“மறைமுக தேர்தல் மூலமே சென்னை மேயர் தேர்வு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை மேயர் தேர்தல் தேர்தல் மறைமுக தேர்தலாகவே நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தென்சென்னை மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் மாற்றம் செய்தால், நீதிமன்றம் சென்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதனை தவிர்க்கும் பொருட்டு கடந்த அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட வரைமுறையின்படியே நகராட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அதே போல் சென்னை மேயர் தேர்தல் தேர்தல் மறைமுக தேர்தலாகவே நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும் ஐ.ஐ.டி. வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
2. ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது
ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.
3. ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல்
ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.