மாநில செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற குழுக்கள் அறிவிப்பு + "||" + New Assembly Committees have been announced

புதுச்சேரி சட்டமன்ற குழுக்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற குழுக்கள் அறிவிப்பு
புதுவை சட்டமன்ற குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி
புதுவை சட்டமன்ற குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுகணக்கு குழு

புதுவை சட்டமன்றத்தில் பொதுகணக்கு குழு, மதிப்பீட்டு குழு உள்பட  பல்வேறு குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களை அமைத்து சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பொதுக்கணக்கு குழுவின் தலைவராக கே.எஸ்.பி. ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், பி.ஆர்.சிவா, பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு, கோலப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், ரமேஷ் பரம்பத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உறுதிமொழிக்குழுவின் தலைவராக நேரு எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக வி.பி.ராமலிங்கம், ஏ.கே.டி.ஆறுமுகம், அனிபால் கென்னடி, அசோக்பாபு, சிவசங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மதிப்பீட்டு குழு

உரிமைக்குழுவின் தலைவராக துணை சபாநாயகர் ராஜவேலு நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், கல்யாணசுந்தரம், ஜான்குமார், ஏ.கே.டி.ஆறுமுகம், அங்காளன் ஆகியோர் உள்ளனர்.
மதிப்பீட்டு குழு தலைவராக நாஜிமும், அதன் உறுப்பினர்களாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், கல்யாணசுந்தரம், நேரு, ரிச்சர்ட், ராமலிங்கம், வைத்தியநாதன், நாக.தியாகராஜன், பிரகாஷ்குமார், சிவசங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.