மாநில செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் மரணம் + "||" + During the inauguration ceremony of the Bar Association Former MLA Sudden death

முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் மரணம்

முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் மரணம்
வக்கீல்கள் சங்க பதவியேற்பு விழாவின்போது முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் மரணம்
புதுச்சேரி
புதுவை வக்கீல்கள் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் புதிய தலைவராக குமரன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோர்ட்டு வளாகத்தில்  இன்று நடந்தது.
இந்த விழாவில் புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வும் மூத்த வக்கீலுமான பரசுராமன் கலந்துகொண்டனர். அவர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்தார். உடனடியாக அருகில் இருந்த வக்கீல்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரசுராமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மரணமடைந்த பரசுராமனுக்கு 75 வயது ஆகிறது. அவர் புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 1991 தேர்தலில் உருளையன்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றி உள்ளார்.
பரசுராமன் மறைவுக்கு அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
==