மாநில செய்திகள்

மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும் + "||" + Admission of rural students in medical colleges will be higher than last year

மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்

மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்
மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் ஜெனரேட்டரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) டாக்டர் ஜெமிலா ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-


நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் என்ற இலக்கோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். தற்போது 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும். டெங்கு காய்ச்சலால் இதுவரை 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 513 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர்
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
2. போட்டித்தேர்வு, வேலைவாய்ப்புக்கு உதவும்: ‘உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ செல்போன் செயலி
போட்டித்தேர்வு, வேலைவாய்ப்புக்கு உதவும்: ‘உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ செல்போன் செயலி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
3. ‘நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை' அமைச்சர் தகவல்
‘நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை' அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
4. அம்மா மினி கிளினிக்குக்கு ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டதாகவும், அம்மா மினி கிளினிக்குக்கு ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார்.
5. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் பா.ஜ.க.வில் தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.