மாநில செய்திகள்

விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் + "||" + Regional traffic inspector killed in accident: Undercover van driver surrenders in Dindigul court

விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்

விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்
விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்.
திண்டுக்கல்,

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் (வயது56) கடந்த 22-ந்தேதி அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை தொடர்ந்து தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கரூரை அடுத்த குன்னுடையகவுண்டன்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ் (29) என்பவர் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு லலிதாராணி முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து சுரேசை, வருகிற 30-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும், அதன்பிறகு கரூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் மாஜிஸ்திரேட்டு லலிதாராணி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் சுரேஷ் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் நக்சலைட்டு சரண்
கேரளாவின் வயநாட்டில் நக்சலைட்டு ஒருவர் சரண் அடைந்து உள்ளார்.
2. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜர் 1,000-ம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
3. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர் விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
4. கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண்
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
5. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார்.