நோணாங்குப்பம் படுகை அணையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வளர்ப்பு கெண்டை மீன்கள் போட்டி போட்டு பிடித்தனர்


நோணாங்குப்பம் படுகை அணையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வளர்ப்பு கெண்டை மீன்கள்   போட்டி போட்டு பிடித்தனர்
x
தினத்தந்தி 24 Nov 2021 8:03 PM GMT (Updated: 24 Nov 2021 8:03 PM GMT)

நோணாங்குப்பம் படுகை அணையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வளர்ப்பு கெண்டை மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

அரியாங்குப்பம்
நோணாங்குப்பம் படுகை அணையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வளர்ப்பு கெண்டை மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

ஆற்றில் வெள்ளம்

தமிழகம், புதுச்சேரியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் அணைகள் திறக்கப்பட்டு தென்பெண்ணை, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அதில் அடித்து வரப்படும் மீன்களை அந்தந்த பகுதிகளில் வலைவீசியும், தூண்டில் போட்டும் பிடிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே உள்ள 4-க்கும் மேற்பட்ட படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. அணை மற்றும் படுகை அணைகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்படும் மீன்களும், கரையோரம் குளம் அமைத்து வளர்க்கப்பட்ட வளர்ப்பு மீன்களும் ஆற்றில் கலந்துள்ளது.

வலைவீசி பிடித்தனர்

தற்போது வெள்ளம் சற்று குறைந்துள்ள நிலையில் சங்கராபரணி ஆற்றின் கடைசி படுகை அணையான நோணாங்குப்பம் படுகை அணையில் மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்த படுகை அணைக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டால் இந்த வகை மீன்களால் உப்பு நீரில் வாழ முடியாது. இந்தநிலையில் நோணாங்குப்பம் படுகை அணை பகுதிக்கு வரும் மீன்களை பாலத்தின் மீது இருந்தபடியே ஏராளமானோர் வலைவீசி போட்டி போட்டு பிடித்தனர்.
வலைகளில் பில்லு கெண்டை எனும் வளர்ப்பு கெண்டை மீன்கள் பெரியஅளவில் சிக்கின. ஒரு மீன் குறைந்தபட்சம் 2 அடியில் இருந்து அதிகபட்சம் 4 அடி வரை உள்ளது. பெரிய அளவிலான மீன் 6 கிலோ வரை இருந்தது. 2 அடி நீளமுள்ள 4 மீன்கள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குறைந்த விலையில் மீன்கள் விற்றதை அறிந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச்சென்றனர். இதனால் நோணாங்குப்பம் படுகை அணை பகுதி நேற்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.

Next Story