நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2021 9:19 PM GMT (Updated: 24 Nov 2021 9:19 PM GMT)

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ளன. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களும் ஒரு கிலோவுக்கு ரூ.120 வரை விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக இந்த மாதம் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும் ஒரு கிலோவுக்கு அதிரடியாக ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வினால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நூலுக்கு மானியம் வழங்கவேண்டும். விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு அரசே உனடியாக வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story