தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைவு


தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைவு
x
தினத்தந்தி 25 Nov 2021 2:48 AM GMT (Updated: 25 Nov 2021 2:48 AM GMT)

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னை,

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

இதனையடுத்து தமிழக அரசும் பண்ணை பசுமை காய்கறிகள் மூலமாக நேற்று முதல் தக்காளி ஒரு கிலோ ரூ.79-க்கு விற்பனையை துவங்கியிருந்தது. இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. 

நேற்று வரை ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே சமயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று லாரிகளில் வரத்து அதிகரித்ததால், தக்காளியின் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து வரத்து அதிகரித்தால், தக்காளியின் விலை குறையத் தொடங்கும் என சென்னை கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தாலும், மேலும் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story