நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை


நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை
x
தினத்தந்தி 25 Nov 2021 7:21 AM GMT (Updated: 2021-11-25T12:51:22+05:30)

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் இன்று மதியம் முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் இன்று மதியம் முதல் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரைநாள் விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story