மாநில செய்திகள்

ஜோதிமணி எம்.பி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டம் + "||" + Jyoti Mani MP sit in protest at Karur District Collector Office

ஜோதிமணி எம்.பி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

ஜோதிமணி எம்.பி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கரூர்,
 
எம்.பி. நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை நடத்ததுவதற்கு பல முறை வலியுறுத்தியும் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி யிடம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து மாவட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாத நிலையில், ஜோதிமணி எம்.பி. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ காலத்தில் கூடுதலாக மழைப்பொழிவு
தென்மேற்கு பருவ காலத்தில் பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. நிலப்பரப்பில் அதிகபட்சமாக திருமயத்தில் 19 செ.மீ. பதிவானது.
2. திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொது வினியோக திட்டம் குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு; 4 அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் 4 அமைச்சர்கள் கலந்தாய்வு நடத்தினர்.