மாநில செய்திகள்

ஓடும் ரெயிலில் பள்ளி மாணவியின் ஆபத்தான சாகசம்..! + "||" + The adventure of the schoolgirl shocked the passengers there.

ஓடும் ரெயிலில் பள்ளி மாணவியின் ஆபத்தான சாகசம்..!

ஓடும் ரெயிலில் பள்ளி மாணவியின் ஆபத்தான சாகசம்..!
பள்ளி மாணவியின் இந்த சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ஓடும் மின்சார ரெயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

கவரப்பேட்டை இருந்து ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், அந்த மாணவி ரெயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரெயிலில் ஏறுகிறார். பின்னர் அதே வேகத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சாகச பயணம் செய்கிறார். அதை தொடர்ந்து மாணவர் ஒருவரும் சாகச பயணம் மேற்கொள்கிறார். 

மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வலிமை’ அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து 'பல்ப்' வாங்கிய வாலிபர்கள் - வீடியோ
வலிமை அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து வாலிபர்கள் செய்த செயல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2. பாலக்காடு - அந்தரத்தில் தொங்கியபடி 72-வயது பாட்டியின் சாகசம்!
அந்த பாட்டி துளியும் பயமில்லாமல் தைரியமாக சவாரி செய்துள்ளார்.
3. பள்ளி மாணவியிடம் 32 பவுன் நகை பறித்தவருக்கு வலைவீச்சு
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பள்ளி மாணவியிடம் 32 பவுன் நகை பறித்தவரை போலீசார் தேடி வருகி்ன்றனர்.
4. மண் அள்ளிய குழியில் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு
தோகைமலை அருகே மண் அள்ளிய குழியில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா
மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.