மாநில செய்திகள்

நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு + "||" + Reduction of platform fare at railway stations to Rs

நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு

நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு
ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு எதிரொலியால், மக்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்தில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது.

இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,  சென்னை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ரூ 50 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் ரூ10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.