மாநில செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!! + "||" + Thundershowers at various places in Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். 

இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, வடபழனி, கே.கே. நகர், சாலிகிராமம், கோடம்பாக்கம், தியாகராய நகர், ராமாபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

மேலும், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கொட்டிவாக்கம், மயிலாப்பூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைவு
ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைவு
ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,534-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பரவலாக பெய்த கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
சென்னையில் நேற்று பரவலாக பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
5. மத்திய குழு இன்று தமிழகம் வருகை; 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு
கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் வருகிறது.