மாநில செய்திகள்

உப்பள பாத்திகளை மழைநீர் சூழ்ந்தது + "||" + rain

உப்பள பாத்திகளை மழைநீர் சூழ்ந்தது

உப்பள பாத்திகளை மழைநீர் சூழ்ந்தது
தொடர் மழையால் ராமநாதபுரம் அருகே உப்பள பாத்திகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
ராமநாதபுரம், 
தொடர் மழையால் ராமநாதபுரம் அருகே உப்பள பாத்திகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
தொடர்மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையை தொடர்ந்து உப்பு உற்பத்தி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் இருந்து திருஉத்தரகோசமங்கை செல்லும் சாலையில் உள்ள ஆனைகுடி கிராமத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட உப்பள பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளன. 
ஏற்கனவே இந்த உப்பளங்களில் இருந்து எடுக்கப்பட்ட கல் உப்புகள் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு உள்ளது. தார்பாய்கள் கிடைக்காததால் ஆனைகுடி உப்பள பாத்திகளில் பிரித்தெடுத்து மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள கல் உப்புகள் தொடர் மழையில் நனைந்து கரைந்து ஓடி வருகின்றன.
கரையும் உப்பு
இதேபோல் திருப்புல்லாணி பகுதியில் உள்ள ஏராளமான உப்பள பாத்திகளிலும் அதிக அளவில் மழை நீர் தேங்கி நிற்பதால் பிரித்தெடுத்து வைக்கப்பட்டுள்ள கல் உப்பு மழையில் நனைந்து கரைந்து வருகின்றன. சாயல்குடி அருகே வாலிநோக்கம், தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களிலும் உப்பள பாத்திகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
ஜெயங்கொண்டத்தில் பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.