மாநில செய்திகள்

நடிகர்-நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா மனைவி-மகனுக்கும் தொற்று + "||" + Infection of actor-dance director Sivashankar and Corona's wife-son

நடிகர்-நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா மனைவி-மகனுக்கும் தொற்று

நடிகர்-நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா மனைவி-மகனுக்கும் தொற்று
நடிகர்-நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா மனைவி-மகனுக்கும் தொற்று.
சென்னை,

பிரபல சினிமா நடன இயக்குனர் சிவசங்கர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தியில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா மன்மத ராசா பாடலுக்கு நடனம் அமைத்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.


பூவே உனக்காக, வரலாறு, விஷ்வ துளசி, உளியின் ஓசை போன்ற படங்களுக்காக சிறந்த நடன இயக்குனருக்கான தமிழக அரசு விருதை பெற்றார். வரலாறு, பரதேசி, தில்லுமுல்லு, அரண்மனை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சிவசங்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல் சிவசங்கர் மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மூன்று பேரும், 2 தவணை தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்பட்டு உள்ளது. சிவசங்கர் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் சிகிச்சைக்கு உதவும்படியும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.
2. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: ராகுல்காந்தி வலியுறுத்தல்
கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
4. மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கரூரில் 17 பேருக்கு கொரோனா
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.