பாலியல் தொல்லை வழக்கில் குறுக்கு விசாரணைக்காக: பெண் ஐ.பி.எஸ். அதிகாரி 1-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்


பாலியல் தொல்லை வழக்கில் குறுக்கு விசாரணைக்காக: பெண் ஐ.பி.எஸ். அதிகாரி 1-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:18 PM GMT (Updated: 25 Nov 2021 8:18 PM GMT)

பாலியல் தொல்லை வழக்கில் குறுக்கு விசாரணைக்காக: பெண் ஐ.பி.எஸ். அதிகாரி 1-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு.

விழுப்புரம்,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாட்சிகள் விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணகை்கு வந்தபோது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.

அதனை தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் சம்பவத்தன்று புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் வாகன டிரைவரும், தற்போது பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவருமான பாலமுருகன் 4-வது சாட்சியாகவும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வழி பாதுகாவலராக சென்றவரும், தற்போது பெரம்பலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான சந்திரசேகரன் 5-வது சாட்சியாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கில் வருகிற 1-ந் தேதியன்று (புதன்கிழமை) பெண் ஐ.பி.எஸ். அதிகாரி விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம் அவரிடம் எதிர்தரப்பான சிறப்பு டி.ஜி.பி. தரப்பினர் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும் நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Next Story