மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம் பறிமுதல் + "||" + Gold worth Rs 85 lakh seized at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.85 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 970 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.


ரூ.85 லட்சம் தங்கம்

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.85 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 970 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைதுசெய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? என இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் குவைத், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.54 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 221 கிராம் தங்கத்தையும், ரூ.3 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன், சிகரெட்டுகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. ஒடிசாவில் சாலையோரம் 5 கிலோ வெடிகுண்டு; கண்டறிந்த பி.எஸ்.எப்.
ஒடிசாவில் சாலையோரம் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது.
3. நூதன முறையில் 85 கிலோ தங்கம் கடத்தல்
டெல்லி, அரியானாவில் நடந்த சோதனையின் முடிவில் 85 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
4. ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான வாட்சுகள் பறிமுதல்
கிரிக்கெட் வீரர் ஹர்தீக் பாண்ட்யாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான வாட்சுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
5. அபுதாபியில் இருந்து சென்னைக்கு சூட்கேஸ் கைப்பிடியில் மறைத்து கடத்திய 2 கிலோ தங்கம் பறிமுதல்
அபுதாபியில் இருந்து சென்னைக்கு சூட்கேசின் கைப்பிடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.90 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 6 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.