மாநில செய்திகள்

11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + 11th Mega Camp: Corona vaccine for 12 lakh people

11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.
சென்னை,

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.


அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26-ந்தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் மாதம் 3-ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.04 லட்சம் பேருக்கும், 10-ந்தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.85 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மேலும், அக்டோபர் 23-ந்தேதி நடைபெற்ற 6-வது மெகா தடுப்பூசி முகாமில் 22.27 லட்சம் பேருக்கும், 30-ந்தேதி 7-வது கட்டமாக 32 ஆயிரம் இடங்களில் 17.14 லட்சம் பேருக்கும், 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16.40 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

11-வது முகாம்

மேலும் இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.

அதன்படி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 9-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேருக்கும், 10-வது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடந்த தடுப்பூசி முகாமில் 18 லட்சத்து 21 ஆயிரத்து 5 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தநிலையில் 11-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் நடந்தது. இதில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு முடிந்தும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 72 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

12 லட்சம் பேருக்கு தடுப்பூசி

அந்தவகையில் நேற்று 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 969 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 48 ஆயிரத்து 863 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.

சென்னையில் 1,600 முகாம்களில் 1 லட்சத்து 528 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தமிழகத்தில் இதுவரை மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1 கோடியே 94 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. நடிகர்-நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா மனைவி-மகனுக்கும் தொற்று
நடிகர்-நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா மனைவி-மகனுக்கும் தொற்று.
3. கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: ராகுல்காந்தி வலியுறுத்தல்
கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
4. மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கரூரில் 17 பேருக்கு கொரோனா
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.